பெண்களின் மகத்தான சாதனைகளை கொண்டாடும் வகையில் இன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு வருடமும் சர்வதேச மகளிர் தினம் மார்ச் 8 ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2022 சர்வதேச மகளிர் தினத்தையொட்டி கூகுள் நிறுவனம் இன்று சிறப்பு “டூடுல்” ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில் பெண்கள் பல்வேறு துறைகளில் முன்னேறி இருப்பதை குறிப்பிடும் வகையில் இந்த டூடுல் அமைந்துள்ளது. உலகின் பல நாடுகளில் வாழும் பல்வேறு கலாச்சாரத்தை சேர்ந்த பெண்களை குறிப்பிடும் வகையில் இந்த டூடுல் அமைந்துள்ளது.
மேலும் சிறப்பு அனிமேஷன் வீடியோவில் பெண்கள் சமூகத்தில் அவர்களின் பல்வேறு பங்களிப்பை விவரிக்கும் வகையில் உள்ளது. மகளிர் தினத்தின் வரலாற்று பின்னணி, அதன் முக்கியத்துவம் ஆகியவையும் அதில் விளக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு விளக்கப்படமும் பெண்கள் தனக்காகவும், தங்கள் குடும்பத்திற்காகவும் மற்றும் சமூகத்திற்காகவும் எப்படி பாடுபடுகிறார்கள் என்ற பொதுவான கருத்தை தெரிவிக்கும் வகையில் கூகுள் தனது டூடுல் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
மேலும் சர்வதேச மகளிர் தினத்தையொட்டி பல்வேறு அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் பெண்களை போற்றி, தங்கள் வாழ்த்தினை பதிவு செய்து வருகின்றனர்.